பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

மோட்டார் சைக்கிள் விபத்துக்களைத் தடுக்கும் பொருட்டு பொலிஸ் அதிகாரிகளினால் இன்று முதல் நான்கு நாள் சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் தினசரி சுமார் ஐவர் இறப்பதாக பொலிஸ் ஊடக தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள்களை ஆய்வு செய்வதற்கும், போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பொடுபோக்கான சவாரி போன்றவற்றை கண்காணிக்கவும் சிறப்பு நான்கு நாள் நடவடிக்கைகள் நாடு முழுவதும் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை எந்த வகையிலும் துன்புறுத்துவதற்கோ அல்லது அச்சுறுத்துவதற்கோ பொலிஸாஎ இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றும் டி.ஐ.ஜி அஜித் ரோஹன மேலும் சுட்டிக்காட்டினார்.

விபத்துக்களைக் குறைப்பதற்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் வீதி விபத்துக்களுக்கு ஆளாகாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாவும் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக விபத்துக்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post