நாட்டில் திருமண பதிவு கட்டணம் அதிகரிப்பு!

நாட்டில் திருமண பதிவு கட்டணம் அதிகரிப்பு!


திருமணப் பதிவுக்கான கட்டணங்களை அதிகரிக்கப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் நேற்று அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார்.

அதன்படி, திருமண விபரம் சமர்ப்பிக்கப்பட்ட 12ஆம் நாளின் பின் நடக்கும் திருமணத்திற்கு 2,500 ரூபா வரை திருமணப் பதிவுக் கட்டணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திருமண நாள் குறித்து அறிவிக்கப்பட்டு 12 நாட்களுக்குமுன் வீடுகளில் திருமணப் பதிவை நடத்தப்பட்டால் அதற்கான புதிய கட்டணமாக 1,000 ரூபாவை நிர்ணயிக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டிலிருந்து இந்தக்கட்டணமானது வெறும் 50 ரூபாவாகவே இருந்து வருகிறது.

அதேபோல, திருமண மண்டபத்தில் வைத்து பதிவாளர் முன் பதிவுசெய்வதற்கான கட்டணத்தை 1,500 ரூபாவாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணமும் 2012ஆம் ஆண்டிலிருந்து 50 ரூபாவாக உள்ளதோடு, பதிவாளருக்கு கொடுக்க வேண்டிய கட்டணமாக 3,500 ரூபா என்பதை நிர்ணயிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post