பாராளுமன்ற உறுப்பினரின் மகனை தாக்கிய மர்மக்கும்பல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்ற உறுப்பினரின் மகனை தாக்கிய மர்மக்கும்பல்!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மகன் சாரங்கன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் வீட்டுக்குள் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8பேர் கொண்ட குழு பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

மர்மக்குழுவினர் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட காட்சிகள் சி.சி.டிவி கமராவில் பதிவாகியுள்ளன. இது தொடர்பில்யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.