உதவி பொலிஸ் அத்தியட்சர் இடமாற்றப்பட்ட உடனே பிணையில் விடுவிக்கப்பட்ட பாதாள உலகத் தலைவர்!

உதவி பொலிஸ் அத்தியட்சர் இடமாற்றப்பட்ட உடனே பிணையில் விடுவிக்கப்பட்ட பாதாள உலகத் தலைவர்!

வென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சர் எரிக் பெரேரா இடம் மாற்றப்பட்டபின் 48 மணி நேரத்தின் பின் வென்னப்புவ பிரதேசத்தில் சித்திரவதை முகாம்களை நடத்தி வந்த பாதாள உலகத் தலைவர் ஒலுமரா பிணையில் வென்னப்புவவுக்குத் திரும்பியுள்ளார்.

உதவி பொலிஸ் அத்தியட்சர் எரிக் பெரேரா விதித்த கடுமையான விதிமுறைகள் காரணமாக பாதாள உலகத் தலைவர் ஒலுமரா பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் எரிக் பெரேரா இடமாற்றப்பட்டு அவருக்குக் கீழ் இயங்கி வந்த சிறப்புப் பிரிவு கலைக்கப்பட்ட பின் ஒலுமரா சிலாபம் நீதிமன்றில் நேற்று முன்தினம் பிணை விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து பிணை பெற்றுள்ளார்.

வென்னப்புவ பகுதியில் இளைஞர்களைக் கடத்தி சித்திரவதை செய்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் ஒலுமரா எரிக் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பாதாள உலகத் தலைவர் ஒலுமரா புத்தளம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இராஜாங்க அமைச்சரின் நெருங்கிய சகா எனக் கூறப்படுகிறது.

இந்த இராஜாங்க அமைச்சரே உதவி பொலிஸ் அத்தியட்சர் எரிக் பெரேராவை இடமாற்றம் செய்து சிறப்பு பிரிவை கலைக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.