ஹட்டன் குடாகம பகுதியில் இன்று (09) ஐஸ் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மலையகத்தில் தொடர்ந்து பனியுடனான வானிலை நிலவி வருகிறது.
இதன்படி, ஹட்டன் பிரதேசத்தில் இன்று பிற்பகல் வேளையில் கடும் ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிய வருகின்றது.
அத்துடன், அதிக பனி காரணமாக வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.