சிறைச்சாலையில் செல்ஃபி எடுத்த ரஞ்சன் - உடனடியாக விசாரணைகள் ஆரம்பம்!

சிறைச்சாலையில் செல்ஃபி எடுத்த ரஞ்சன் - உடனடியாக விசாரணைகள் ஆரம்பம்!

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, புகைப்படமொன்றுக்கு போஸ் கொடுத்தது குறித்து விசாரணைகளைத் தொடங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ரஞ்சன் ராமநாயக்கவினை சிறைச்சாலையில் சந்தித்தபோது தனது கையடக்க தொலைப்பேசியில் செல்ஃபி எடுத்திருந்தார்.

இதற்கான வாய்ப்பை வழங்கிய சிறைச்சாலை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அறிவுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தனது பாராளுமன்ற சலுகைகளை மீறி இந்த செயலை செய்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post