துபாயில் ஒரு குழு இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பணியில் இறங்கிய அமைச்சர் நாமல்!

துபாயில் ஒரு குழு இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பணியில் இறங்கிய அமைச்சர் நாமல்!


துபாயில் நிர்கதியாகியுள்ள ஒரு குழு இலங்கையர்களை மீளலைத்து வரும் நடவடிக்கையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.


நேற்றைய தினம் துபையில் வைத்து அங்கு சில இலங்கையர்களை சந்தித்த அமைச்சர், அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

துபையில் ஒரு குழு இலங்கையர்களை சந்தித்தபோது, அவர்கள் அங்கு பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்ததாக அவர் தனது ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டி.வி சாணக்க மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஒத்துழைப்புடன் அவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post