
டாம் வீதியில் உள்ள காஸ் வேக் சந்தியில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பயணப் பையொன்றில் குறித்த சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இது பெண்ணின் சடலம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு கிடைத்த தகவலைத் தொடந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த இடத்தில் உள்ள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.