இம்ரான்கானின் வேண்டுகோளுக்கு இனங்க நாம் கொரோனா சடலங்களை அடக்க அனுமதியளிக்கவில்லை - திலும் அமுனுகம அதிரடி!

இம்ரான்கானின் வேண்டுகோளுக்கு இனங்க நாம் கொரோனா சடலங்களை அடக்க அனுமதியளிக்கவில்லை - திலும் அமுனுகம அதிரடி!

கொரோனா தொற்று காரணமாக இறந்த சடலங்களை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய அனுமதி வழங்கியமை எவரினதும் வேண்டுகோளுக்கு இனங்க இல்லை என்று இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செயல்முறை வேகமாக நடப்பதாலேயே இது அனுமதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ராம் கானின் இலங்கை விஜயத்திற்கு பின்னரே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக பரவி வரும் வதந்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, தடுப்பூசி வழங்கப்படுவதினால் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதில் எந்தவித பாதிப்பும் இல்லை என கூறியதன் காரணமாகவே அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.