நல்லடக்க விவகாரம்; இம்ரான் கானின் தலையீடே காரணம்!

நல்லடக்க விவகாரம்; இம்ரான் கானின் தலையீடே காரணம்!

கொரொனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலில் அறிவித்தது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இம்ரான் கான் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடியதாகவும், நேர்மறையான பதில் கிடைத்ததாகவும் இம்ரான் கான் தெரிவித்தார்.

$ads={1}

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெற்காசியாவின் முஸ்லிம் தலைவராக இந்தியாவைத் தவிர பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.