தெருவில் சும்மா நின்றிருந்த குற்றச்சாட்டில் நான்கு இளம் பெண்கள் கைது!

தெருவில் சும்மா நின்றிருந்த குற்றச்சாட்டில் நான்கு இளம் பெண்கள் கைது!


காரணங்கள் எதுவுமின்றி இரவு வேளையில் தெருக்களில் ‘சும்மா' நின்றிருந்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நான்கு இளம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த நான்கு பெண்களுக்கும் நீதவான் பிரியந்த லியானகே தலா 50 ரூபா அபராதமாக விதித்தார்.


மேற்படி நான்கு பெண்களையும் கைது செய்த கோட்டை பொலிஸார், தெருக்களில் காரணமின்றி நின்றிருந்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிந்தனர்.


இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், நான்கு பெண்களுக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post