வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி விரைவில்!

வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி விரைவில்!

ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டிற்கு உட்பட்டு நாட்டிற்கு வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அரசாங்கமும் வாகன இறக்குமதியாளர்களும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் இறக்குமதி துறையில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் 4 ஆம் திகதி நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் ஜயசுந்தர இந்த கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார், நிதி அமைச்சின் செயலாளர், இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர், மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல், சுங்க இயக்குநர் ஜெனரல், இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். மேலும் வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் புதிய வாகன இறக்குமதியாளர்களும் கலந்து கொண்டனர்.

அதனடிப்படையில், நாட்டிற்கு வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு ஒரு ஆண்டுக்கான டாலர் (அந்நிய செலாவணி) எல்லை விதிக்கப்படும், அந்நிய செலாவணியினை கட்டுப்படுத்துவதற்கு மற்றும் வருடாந்தம் ஒதுக்கப்படும் டாலர்களை பதிவு செய்யப்பட்ட மற்றும் புதிய வாகன இறக்குமதியாளர்களிடையே ஒதுக்கீடாக விநியோகிக்கப்படும்.

அதன்படி, இறக்குமதியாளர்கள் தங்கள் ஒதுக்கீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அந்நிய செலாவணி அளவு வரை மட்டுமே வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், தற்போது அதிகரித்து வரும் உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையை விரைவாகக் குறைப்பதற்காக என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இறுதி முடிவை எட்டுவதற்காக வாகன இறக்குமதியாளர்களிடமிருந்து மேலதிக திட்டங்களைப் பெற அரசாங்கம் 02 வாரங்கள் கால அவகாசம் அளித்துள்ளது. 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post