தெல்தெனிய பகுதி பாடசாலை மாணவன் மகாவலி ஆற்றில் நீராடச் சென்று மாயம்!

தெல்தெனிய பகுதி பாடசாலை மாணவன் மகாவலி ஆற்றில் நீராடச் சென்று மாயம்!


மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.


இந்நிலையில் குறித்த மாணவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த மாணவர் நண்பர்களுடன் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் இன்று (14) நண்பகல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெல்தெனிய பகுதியை சேர்ந்த சாதாரண தரபரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர் ஒருவர் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post