உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு சற்றுமுன் வெளியிட்ட தீர்மானம்!

உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு சற்றுமுன் வெளியிட்ட தீர்மானம்!

உயர்தரப் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு சற்றுமுன் வெளியிட்ட தீர்மானம்!

2021ஆம்  ஆண்டுக்கான க.பொ.த உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சினால் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.


எனினும், ஏற்கனவே இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த முடியாத நிலை காணப்படுவதாக பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித இன்று காலை தெரிவித்திருந்தார்.


இந்நிலையிலேயே, குறித்த பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சினால் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.


$ads={1}


அத்துடன், சமூகத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதிலாகவே பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளதாகவும், கல்வி அமைச்சு அவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, பரீட்சை நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை கல்வி அமைச்சு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post