2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பாக வெளியான தகவல்!

2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பாக வெளியான தகவல்!


2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2021 உயர்தர பரீட்சையை பிற்போட பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளது.


பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த, கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை என்று கூறினார்.


அதன்படி, கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் இரண்டு பரீட்சைகளையும் பிற்போட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


$ads={1}


இருப்பினும், இது குறித்து கல்வி அமைச்சு மேலும் விவாதங்களை நடத்தும் என்று ஆணையாளர் கூறினார்.


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2021 உயர்தர பரீட்சைகள் ஓகஸ்டில் நடைபெறாது என்றும், பரீட்சை திகதிகள் இதுவரைஉறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post