ஷாஹித் அஃப்ரிடியின் மூத்த மகளை திருமணம் செய்யவுள்ள ஷஹீன் அஃப்ரிடி!

ஷாஹித் அஃப்ரிடியின் மூத்த மகளை திருமணம் செய்யவுள்ள ஷஹீன் அஃப்ரிடி!


கிரிக்கெட் வீரர் ஷஹீன் அஃப்ரிடியின் குடும்பத்தினர் தனது மகள் அக்ஸாவை திருமணம் செய்துகொள்ள அணுகியுள்ளதை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி உறுதிப்படுத்தியுள்ளார்.


முன்னதாக, இது தொடர்பில் வதந்திகள் பரப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இரு தரப்பினரும் இரு தொடர்பில் வெளிப்படையாக கருத்து வெளியிட்டுள்ளனர். 


அஃப்ரிடி தனது சமீபத்திய ட்விட்டர் பதிவில், இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் விதியிருந்தால் ஷஹீனும் அவரது மகளும் திருமணம் செய்து கொள்வார்கள் என நம்புவதாக தெரிவித்திருந்தார்.


$ads={1}


எவ்வாறாயினும், ஷஹீன் அப்ரிடியின் தந்தை அயாஸ் கான் இந்த திருமண திட்டத்தை ஷாஹித் அப்ரிடியின் குடும்பத்தினரிடம் முன்வைத்ததாக பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன, அதுவும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இந்நிலையில், அஃப்ரிடியின் மூத்த மகளான அக்ஸா இன்னும் படித்துக்கொண்டிருக்கும் மாணவி என்பதால்  இன்னும் இரண்டு ஆண்டுகள் எடுக்கும் என அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.


ஆனால் ஷாஹித் அப்ரிடியின் இன்றைய  ட்விட்டர் பதிவு இது தொடர்பில் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது, இருப்பினும், அவர் ஷஹீன் அஃப்ரிடியின் வேண்டுகோளை மறுக்கவில்லை என தெரியவந்துள்ளது.


எம்.எம் அஹ்மத்
 

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.