சுற்றுலா துறையில் இருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!

சுற்றுலா துறையில் இருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!


கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையினருக்கான சலுகைகளை மேலும் நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.


இதற்கமைய, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான கடன் மற்றும் குத்தகை சலுகைகளை இந்த வருட இறுதி வரை நீடிபடபது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளினால் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


$ads={1}


சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதிர்வரும் மே 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.


மேலும், கடந்த ஜனவரி முதல் நாட்டின் விமான நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுலாத்துறை இன்னும் இயல்பு நிலைமைக்கு திரும்பாமையை கருத்திற்கொண்டு சலுகைகளை நீடிக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.