சுகாதார முகக் கவசங்களைத் தவிர்த்து, முகம் மறைப்பதை தடைசெய்யும் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்!

சுகாதார முகக் கவசங்களைத் தவிர்த்து, முகம் மறைப்பதை தடைசெய்யும் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்!


சுகாதார பாதுகாப்பு முகக்கவசங்களைத் தவிர்த்து, ஏனைய வகையில் முகத்தை மறைப்பதை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்ட மூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகள் தவிர்ந்த முகத்தை முழுமையாக மூடுவதனை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முகத்தை முழுமையாக மூடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாகும்.

இதன் ஊடாக பயங்கரவாத நடவடிக்கையும் முன்னெடுக்கப்படலாம்.

ஏப்ரல் 21 தாக்குதலின் ஊடாக நாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.