
இது இன்று பிரிட்டன், அமெரிக்கா, சுவீடன், கனடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் காட்சிப்படுத்தப்படும்.
இந்த ஆவணப்படம் எதிர்காலத்தில் பிற நாடுகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
இது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வின் கவனத்திற்கும் கொண்டு வரப்படும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பல சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தாலும், விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் குறித்த கருத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என இந்த ஆவணப்படம் எடுத்துக்காட்ட முயல்கிறது.
அதன்படி, விடுதலைப் புலிகள் செய்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த இந்த ஆவணப்படத்தை நெத் எஃப்.எம் எனும் சிங்கள வானொலி சேவை தயாரித்து உலகளாவிய றீதியில் திரைப்படுத்த முயன்று வறுகிறது. (யாழ் நியூஸ்)