சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் நாட்டை ஆள முயற்சிக்கின்றனர்! ஜனாதிபதி எச்சரிக்கை!

சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் நாட்டை ஆள முயற்சிக்கின்றனர்! ஜனாதிபதி எச்சரிக்கை!


சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் நாட்டை ஆள முயற்சிக்கிறார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதை அர்த்தப்படுத்துவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக தான் ஊடகங்களில் தலையிடவில்லை எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார்.

போரின்போது நாட்டை ஆதரிக்காத சில ஊடகவியலாளர்கள் இப்போது சில ஊடக நிறுவனங்களுக்குள் நுழைந்து தேசிய திட்டங்களைத் தாக்கி வருவதாக ஜனாதிபதி மேலும் கூறினார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.