காணாமல் போய் வீடு திரும்பிய மாணவன்; காரணம் வெளியானது!

காணாமல் போய் வீடு திரும்பிய மாணவன்; காரணம் வெளியானது!

கொழும்பு இரத்மலானை பிரதேசத்தில் காணாமல் போயிருந்த சாதாரண தர மாணவன் நேற்று (20) இரவு வீடு திரும்பியுள்ளார். 

எல்டன் டெவோன் கெனின் என்ற மாணவன் நேற்று முன்தினம் முதல் திடீரென காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸ் படை அமைக்கப்பட்டு விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தனக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்று தோன்றியதால் தனிமையில் இருந்ததாக வீடு திரும்பிய மாணவன் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அவர் யாருடன் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post