அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகளவில் உயர்வு - நுகர்வோர் சிரமத்தில்!

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகளவில் உயர்வு - நுகர்வோர் சிரமத்தில்!

நிர்ணய விலைகளின் கீழ் சில அத்தியாவசிய பொருட்களை சதொச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்ய முடியாமல் உள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.


27 அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலையின் கீழ் சதொச ஊடாக கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு கடந்த மாதம் 08 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டுள்ளது.


எனினும் அந்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் உள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.


$ads={1}


இதேவேளை, புறக்கோட்டையில் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அன்றாட நுகர்வு பொருட்களின் விற்பனை 50 சதவீதம் குறைவடைந்துள்ளதாக கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.பழனியாண்டி எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.


தற்போது சந்தையில் கௌப்பி, பயறு, உழுந்து மற்றும் குரக்கன் உள்ளிட்டவற்றின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post