இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கும் போர்க்குற்ற ஆதாரங்களை சேகரிப்பதற்கு ஜெனீவாவில் புதிய செயலகம்!

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கும் போர்க்குற்ற ஆதாரங்களை சேகரிப்பதற்கு ஜெனீவாவில் புதிய செயலகம்!


இலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக மனித உரிமை பேரவை ஜெனீவாவில் செயலகமொன்றை ஏற்படுத்தவுள்ளது.


மனித உரிமை பேரவையின் செயலாளர் Goro Onojima உறுப்பு நாடுகளிற்கு வழங்கியுள்ள சுற்று நிரூபத்தில் 13 உறுப்பினர்களை கொண்ட செயலகம் குறித்தும் அதற்கு வருடாந்தம் அமெரிக்க டொலர் தேவைப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


இந்த செயலகம் விசாரணையாளர்கள் சட்டத்தரணிகளை கொண்டிருக்கும். உருவாக்கப்படவுள்ள இந்த செயலகம் உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரிக்கும்.


இதன் காரணமாக இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட படைத்தரப்பினர் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம் வெளிநாட்டு நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.


இலங்கையின் யுத்தத்துடன் தொடர்புபட்ட அரசியல் தலைவர்களும் வெளிநாடுகளில் கைது செய்யப்படலாம்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.