
நிகர நிதிக் கடன் இனால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவதற்காகவே இந்த சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறுகிறது.
சத்தியாக்கிரகத்திற்கு தனது முழுமையான ஆதரவு இருப்பதாக போராட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களுக்கான ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் நிகர நிதிக் கடன் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்க நான் முழுமையாக தலையிடுவேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)