சுவிட்ஸர்லாந்தில் பெண்கள் புர்கா மற்றும் நிகாப் அணிய தேவையில்லை என்ற முடிவை நாம் வரவேட்கிறோம்! - உலமா கட்சி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுவிட்ஸர்லாந்தில் பெண்கள் புர்கா மற்றும் நிகாப் அணிய தேவையில்லை என்ற முடிவை நாம் வரவேட்கிறோம்! - உலமா கட்சி


பொது இட‌ங்க‌ளில் பெண்க‌ள் த‌ம் முக‌த்தை முழுமையாக‌ மூடுவ‌து அல்ல‌து மாஸ்க் போன்று மூடுவ‌தை சுவிட்சர்லாந்து த‌டை செய்திருப்ப‌தை நாம் வ‌ர‌வேற்கும் அதேவேளை இவ‌ற்றால் தீவிர‌வாத‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த முடியும் என‌ நினைப்ப‌து ப‌டு முட்டாள்த்த‌ன‌ம் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.


இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்திருப்ப‌தாவ‌து,


முஸ்லிம் பெண்க‌ள் முக‌ம் மூட‌த்தான் வேண்டும் இஸ்லாத்தின் புனித‌ குர்ஆனும் ந‌பி வ‌ழியும் போதிக்க‌வில்லை.


புர்கா, நிகாப் (ஆங்கில‌த்தில் மாஸ்க்) அணித‌ல் என்ப‌து யூத‌ர்க‌ள் கால‌த்திலிருந்து வ‌ரும் ம‌த்திய‌ கிழ‌க்கின் ப‌ழைமை வாய்ந்த‌ க‌லாசார‌மும். இந்த‌ வ‌ழ‌க்க‌ம் அர‌பு முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் இருந்த‌ போதும் இவ்வாறு முக‌த்தை ம‌றைக்க‌ வேண்டும் என‌ இறுதி இறைத்தூத‌ர் க‌ட்ட‌ளையிட‌வில்லை.


மாற்ற‌மாக‌ ஒரு பெண், முக‌ம், ம‌ணிக்க‌ட்டு கை த‌விர‌ அனைத்தையும் ம‌றைக்க‌ வேண்டும் என‌ முஹ‌ம்ம‌து ந‌பி (ஸல்) சொன்ன‌த‌ன் மூல‌ம் முஸ்லிம் பெண் முக‌ம் மூடுவ‌து ந‌பியின் வ‌ழிகாட்ட‌லுக்கு மாற்ற‌மான‌தாகும்.


ஆனாலும் பிற்கால‌த்தில் பெண்க‌ள் சுத‌ந்திர‌மாக‌ வெளியே செல்வ‌த‌ற்காக‌ முக‌ம் மூடும் வ‌ழ‌மை வ‌ந்த‌து.


க‌றுப்பு நிற‌ அபாயா அணிவ‌தும் யூத‌, ம‌ற்றும் சேசுவின் தாய், புனிதாவ‌தி மேரியின் க‌லாசார‌மாக‌ இருந்த‌ போதும் அத‌னை இஸ்லாம் அனும‌தித்துள்ள‌து. இறைதூத‌ர் கால‌த்து முஸ்லிம் பெண்கள் க‌றுப்பு ஆடை அணிந்த‌தாக‌ ஆதார‌ம் உள்ள‌ன‌. அன்னை தெரேசா கூட‌ இள‌ம் வ‌ய‌தில் க‌றுப்பு அபாயாவே அணிந்தார்.


முஸ்லிம் பெண் த‌ன‌து முக‌த்தை ம‌றைத்து நிகாப், மாஸ்க் அணிந்தால் அவ‌ள் மூல‌மான‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லை த‌டுக்க‌லாம் என்றால் கொரோனா கார‌ண‌மாக‌ உல‌க‌ம் முழுவ‌தும் ஒரு வ‌ருட‌த்துக்கும் மேலாக‌ ஆணும் பெண்ணும் முக‌ம் மூடி மாஸ்க் மூடியிருக்க‌ வேண்டும் என்ற‌ ச‌ட்ட‌ம் உள்ள‌ போது மிக‌ இல‌குவாக‌ தாக்குத‌ல்க‌ளை ந‌ட‌த்தியிருக்க‌ முடியும். மாஸ்க் அணிவ‌தும், நிகாப் அணிவ‌தும் ஒன்றுதான். அப்ப‌டி மாஸ்க் அணிந்து வ‌ந்த்ச் பெண் த‌ற்கொலை தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌தாக‌ செய்திக‌ள் இல்லை.


அப்ப‌டித்தான் த‌ன் உயிரை மாய்த்துக்கொள்ள‌ வ‌ரும் பெண் நிச்ச‌ய‌ம் முக‌ம் மூடித்தான் வ‌ருவாள் என‌ எண்ணுவ‌து எல்லாவ‌ற்றையும் விட‌ ம‌ட‌த்த‌ன‌மாகும். ராஜிவ் காந்தியை த‌ற்கொலை குண்டு வைத்து கொன்ற‌ பெண் மாஸ்க்கோ, புர்க்காவோ அணிந்து வ‌ர‌வில்லை. சாக‌ப்போகிறோம் என‌ நினைக்கும் பெண் எந்த‌ ஆடையிலும் வ‌ருவாள்.


இவ்வாறு தீவிர‌வாத‌த்தை த‌டுப்ப‌த‌ற்காக‌ முக‌ம் ம‌றைத்த‌லை த‌டை செய்வ‌தாக‌ நினைப்ப‌து த‌ற்கொலை தாக்குத‌ல்க‌ளை இல‌கு ப‌டுத்துவ‌தாகும். தாக்குத‌லுக்கு வ‌ரும் பெண் முக‌ம் மூடி வ‌ருவாள் என்றுதான் இராணுவ‌ம் எதிர்பார்த்திருக்கும். ஆனால் ஜீன்ஸ் சேட் போட்டு முக‌ம் மூடும் பெண் வ‌ந்து தாக்கினால் என்ன‌ செய்வ‌து என்ற‌ சாதார‌ண‌ அறிவு கூட‌ ஐரோப்பாவுக்கு இல்லை என்ப‌தே க‌வ‌லையான‌ விச‌ய‌ம்.


$ads={1}


முஸ்லிம் பெண்க‌ள் முக‌ம் மூட‌ தேவையில்லை என்ப‌தை உல‌மா க‌ட்சி 2006 முத‌ல் சொல்லி வ‌ருகிற‌து. அந்த‌ வ‌கையில் எந்த‌ப்பெண்ணும் முக‌ம் மூட‌த்தேவையில்லை என‌ சுவிஸ் ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ருவ‌து வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து. கார‌ண‌ம் முக‌ம் மூடுவ‌தால் முஸ்லிம் அல்லாத‌ ஆண், அல்ல‌து பெண் திருட‌ர்க‌ளும் அவ்வாறான‌ ஆடையை ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்ளைய‌டித்து விட்டு முஸ்லிம்க‌ள் மீது ப‌ழி போட‌ முடியும் என்ப‌தால் இச்ச‌ட்ட‌த்தை நான் வ‌ர‌வேற்கிறோம். ஆனாலும் பெண்க‌ள் மாஸ்க் அணிவ‌தால் தீவிர‌வாத‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியும் என‌ சுவிஸ் அர‌சு நினைக்குமானால் அதைப்போன்ற‌தொரு முட்டாள்த‌ன‌ம் இருக்க‌ முடியாது என்ப‌தையும் சொல்லி வைக்கிறோம் என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.