சிறைவாசம் அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (09) கொழும்பில் உள்ள இலங்கை பத்திரிகையாளர் மன்றத்தின் முன் அழைத்து வரப்பட்டார்.
அங்கிருந்து அவரை திருப்பி அழைத்து செல்லும் போது குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது அவரை பேருந்திற்குள் இழுத்து சென்று ஏற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.