நேற்று நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!

நேற்று நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!

நேற்று (15) நாட்டில் புதிதாக 331 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 83 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

ஏனைய 248 பேருள் மாத்தறை மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக குறித்த செயலணி தெரிவித்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் 49 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 28 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 34 நபர்களும் கண்டி மாவட்டத்தில் 11 பேரும் பதுளை மாவட்டத்தில் 07 நபர்களும் யாழ். மாவட்டத்தில் 08 பேரும் புத்தளம் மாவட்டத்தில் இருவரும் வவுனியா மாவட்டத்தில் மூவரும் மன்னார் மாவட்டத்தில் 06 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 நபர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 09 பேரும் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு – வௌ்ளவத்தை பகுதியில் நால்வர், மருதானை பிரதேசத்தில் மூவர் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாத்தறை – கொஸ்மோதரை பகுதியில் 28 பேருக்கும் மொறவக்க பிரதேசத்தில் 15 பேருக்கும் பஸ்கொட பகுதியில் நால்வருக்கும் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் மூவர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

நுவரெலியா – ஹட்டன் பிரதேசத்தில் இருவரும் நோர்வூட் பகுதியில் மூவரும் புசல்லாவை பகுதியில் ஒருவரும் பொகவந்தலாவை பகுதியில் ஒருவரும் மஸ்கெலியா பகுதியில் இருவரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.