நான் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என சிலர் பதற்றத்தில் உள்ளனர்! -ஜனாதிபதி

நான் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என சிலர் பதற்றத்தில் உள்ளனர்! -ஜனாதிபதி


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியின் எண்ணக்கருவில் நடைபெற்று வரும் ஊருடன் கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் வலப்பனையில் நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


மக்கள் தமக்கு அறுபது மாதங்கள் ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும், தற்பொழுது 14 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இன்னும் பெருமளவு ஆட்சிக் காலம் தமக்கு எஞ்சியுள்ளது எனவும், அதில் எவ்வாறு ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது என்பதனை பார்த்து மக்கள் தீர்மானங்களை எடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தாம் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என சிலர் பதற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும், கடந்த தடவையும் மக்களே இதனை தீர்மானித்தார்கள் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.