
நேற்று (29) தனது வாகனத்தை பரிசோதிக்க முற்பட்ட போது, வாகன சாரதி தப்பித்துச் செல்ல முயன்றதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர், பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) அஜித் ரோஹன தெரிவித்தார்.
குறித்த சாரதி ஊனமுற்றவர் என்றும் செல்லுபடியாம சாரதி உரிமம் இல்லாமலே குறித்த வாகனத்தை செலுத்தியதாகவும் கண்டறியப்பட்டது என்றார்.
ஊனமுற்ற நிலையில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது என்று விளக்கமளித்தபோது சந்தேக நபர் தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார்.
பொலிஸ் கான்ஸ்டபிள் தப்பித்துச் செல்ல முயன்ற நபரை தடுத்து கைது செய்தும் உள்ளார்.
கொலை முயற்சி குற்றச்சாட்டில் சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.