கொழும்பில் பிரம்மாண்ட நான்கு வழி ரயில் பாதைகள் - முழு விபரம்!

கொழும்பில் பிரம்மாண்ட நான்கு வழி ரயில் பாதைகள் - முழு விபரம்!

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பு நகர எல்லைகளில் தரைக்கு மேலான நான்கு ரயில் பாதைகள் நிர்மானிக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சமர்ப்பித்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தனியார் முதலீட்டாளர்களுடனான பொது-தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நான்கு ரயில் தடங்களுக்கும் ரக்த, ஹரித, நீலா, தம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

  1. 42 கி.மீ தூரத்தை கொண்ட ரக்த ரயில் பாதை, ராகமையில் இருந்து கொட்டாவ வரை புறக்கோட்டை வழியாக செல்லும்.
  2. 28 கி.மீ தூரத்தை கொண்ட ஹரித ரயில் பாதை, மொரட்டுவையில் இருந்து களனி வரை நாரஹேன்பிட்ட் வழியாக செல்லும்.
  3. 23 கி.மீ தூரத்தை கொண்ட நீலா ரயில் பாதை, கோட்டையில் இருந்து ஹுனுபிட்டி வரை பத்தரமுல்ல, இசுருபாய வழியாக செல்லும்.
  4. தம் ரயில் பாதையானது, கொழும்பு போட் சிட்டியில் இருந்து பொரளை வழியாக அதுருகிரிய வழியாக செல்லும்.

என அமைச்சர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post