
மேலும் சந்தைக்கு தேவையான அளவு உற்பத்தி பொருட்கள் கிடைக்காமையே இந்த விலை அதிகரிப்பிற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கௌபி, பயறு, உளுந்து, குரக்கன் மற்றும் மஞ்சள் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயறுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் மஞ்சளின் விலை 4,000 முதல் 5,000 ரூபாவிற்கும் இடையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஒரு கிலோ கிராம் கௌபியின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் உளுந்து 1,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.