கொரோனா தொற்றாளரை இடமாற்றம் செய்ததற்காக மருத்துவமனையில் பரபரப்பு - சொத்துக்கள் பல சேதம்!

கொரோனா தொற்றாளரை இடமாற்றம் செய்ததற்காக மருத்துவமனையில் பரபரப்பு - சொத்துக்கள் பல சேதம்!

நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர் அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனையில் நேற்றிரவு (7) குழுவினரால் கடமையில் இருந்த மருத்துவர் உட்பட மருத்துவமனை அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டதுடன், மருத்துவமனையும் சேதமாக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு தொடர்பான சுவரொட்டிகளும் கிழித்து நீக்கப்பட்டதாவும் மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார்

நேற்றிரவு 11 மணியளவில் சுவாச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியொருவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதுடன், பின்னர் நோயாளியின் அறிகுறிகளின் அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டு டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்று மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

நோயாளியை டிக்கோயா அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றுவதை எதிர்த்து நோயாளியுடன் மருத்துவமனைக்கு வந்த 70 நபர்கள் மருத்துவர் மற்றும் ஊழியர்களை அச்சுறுத்தியதோடு, மருத்துவரின் கார் மற்றும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் காட்சிப்படுத்தப்பட்ட பல சுகாதார பாதுகாப்பு விளம்பரங்களை கிழித்து எறிந்ததாகவும் மருத்துவ அதிகாரி கூறினார்.

டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நோயாளி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் இறந்துள்ளார். பின்னர் எண்டிஜன் பரிசோதனையிலிருந்து கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பது உறுதி செய்யப்பட்டதாவும் மருத்துவ அதிகாரி தெரிவித்தார். 

கொரோனா சிகிச்சை மையமாக நிறுவ இம்மருத்துவமனை தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவததோடு, இந்த சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனை மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து மத்திய மாகாண சுகாதார இயக்குநர் நிஹால் வீரசூரியா கூறுகையில், ​​இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்யுமாறு ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்ததாக அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.