க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைக் காலங்களில் வரவிருக்கும் புதிய மாற்றம்!

க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைக் காலங்களில் வரவிருக்கும் புதிய மாற்றம்!

இலங்கையில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த பரீட்சை காலத்தை திருத்தியமைக்க கல்வி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

இதன் அடிப்படையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை ஆகஸ்ட் மாதத்திலும், க.பொ.த. உயர் தர பரீட்சைகளை டிசம்பர் மாதத்திலும் நடாத்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பான முன்மொழிவு அடுத்த வாரம் அமைச்சரவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த புதிய முறைமையால் மாணவர்களின் கல்வி காலம் 09 மாதங்களினால் குறைக்கப்படும் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.