பசறை விபத்து: பஸ்ஸினை தவற விட்டு, முச்சக்கர வண்டியில் சென்று பஸ்ஸில் ஏறிய தம்பதியினர் உயிரிழந்த சோகம்!

பசறை விபத்து: பஸ்ஸினை தவற விட்டு, முச்சக்கர வண்டியில் சென்று பஸ்ஸில் ஏறிய தம்பதியினர் உயிரிழந்த சோகம்!


பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் பலியாகியிருந்தனர். பசறை பகுதியே சோகமயமாகியுள்ளதுடன், வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றன. பெருந்திரளான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.


பஸ் விபத்தில் லுனுகலை அடாவத்தை பகுதியைச் சேர்ந்த பெனடிக் மெடோனா (31), அந்தோனி நோவா (32) ஆகியோரும் பஸ்ஸில் ஏறுமிடத்திற்கு வர தாமதமாகியதால் பஸ்ஸினை தவறவிட்டுள்ளனர்.


ஆனால் உரிய நேரத்தில் பதுளை வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக முச்சக்கர வண்டி ஒன்றில் வந்து பஸ்ஸினை துரத்திபிடித்து ஏறியுள்ளனர்.


மேலும், அந்தோனி நோவா என்பவர் பிறந்த நாளிலேயே உயிரிழந்தும் குறிப்பிடத்தக்கது.


தமிழ் பக்கம்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post