மகாவலி ஆற்றில் காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு!

மகாவலி ஆற்றில் காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு!

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில், காணாமல் போன பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் நண்பர்களுடன் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் நேற்று (14) நண்பகல் காணாமல் போயிருந்தார்.

தெல்தெனிய பகுதியை சேர்ந்த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில், குறித்த மாணவனின் சடலம் மகாவலி ஆற்றில் இன்று பிற்பகல் வேளையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.