நாட்டில் கண்டி மற்றும் நீர்கொழும்பு பகுதிகளின் இரு மரணங்கள் பதிவு!

நாட்டில் கண்டி மற்றும் நீர்கொழும்பு பகுதிகளின் இரு மரணங்கள் பதிவு!


நாட்டில் இன்று (16) மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்பிற்பாடு மொத்த மரணங்களின் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது.


கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (15) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொரோனா நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.


நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவ பீட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (16) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், இருதய நோய் நிலை, கொரோனா நிமோனியா நிலை, உயர் இரத்த அழுத்தம், உக்கிர நீரிழிவு நிலை மற்றும் சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.