அசாத் சாலி எதற்காக கைது செய்யப்பட்டார்! வெளியான தகவல்!

அசாத் சாலி எதற்காக கைது செய்யப்பட்டார்! வெளியான தகவல்!


இன்று (16) மாலை சி.ஐ.டியினரால் கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டார் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


எனினும், சில தினங்களுக்கு முன் அசாத் சாலியின் ஊடக சந்திப்பினொன்றின் போது ஷரீஆ சட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தார் என பல புகார்கள் அவர் மீது சி.ஐ.டியினருக்கும் பொலிஸ் தலைமையகத்துக்கும் வந்தவண்ணம் இருந்துள்ளதன் காரணமாகவே கைது செய்யப்பட்டதாக பரவலாக நம்பப்பட்டது. 


இருந்தபோதிலும், இன்று மாலை 6 மணியளவில் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


-எம்.எம் அஹ்மட்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post