புர்கா மீது தடை இல்லை? குழப்பமான அறிவிப்பு வெளியானது!

புர்கா மீது தடை இல்லை? குழப்பமான அறிவிப்பு வெளியானது!


புர்கா மற்றும் நிகாப் ஆகிய முஸ்லிம்களின் ஆடைகள் மீது தடை விதிக்கும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சு இன்று (16) மாலை அறிவித்துள்ளது.


வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தபோது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் இத்தடை பத்திரம் சமர்பிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இருப்பினும் நேற்று அப்படியொரு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.


இந்நிலையிலேயே மேற்படி அட்மிரல் ஜயனாத் கொலம்பகேயின் அறிவிப்பு வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.