போராளிகளே புறப்படுங்கள்! சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; கட்சியை பாதுகாப்போம்!

போராளிகளே புறப்படுங்கள்! சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; கட்சியை பாதுகாப்போம்!


கடந்தகால அரசியல் அமைப்பு திருத்தத்தின் போது முஸ்லிம்களின் உரிமையை பறிக்க துணை செய்து உதவியவர்கள் சம்பந்தமான சமூகத்தின் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் நாம் கண்கூடாக கண்டோம். 


இந்நிலையில், இவ்விடயத்தில் ஆதரவு தெரிவித்த இவ் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஒருவருக்கு ஒருவர் குறைகூறும் நிலையில் தலைமைகளுக்கு இடையிலையே  கட்டுப்பாடில்லாத ஒரு அசிங்கமான வீதிச் சண்டையாக மாறியதையும் நாம் அறிவோம். 


இறுதியில் தலைமைகளும் உறுப்பினர்களும் சேர்ந்தே இந்த துரோகத்தை அவர்களின் சில வரப்பிரசாதங்களுக்காக முஸ்லிம் சமூகத்திற்கு இந்த அநியாயத்தை செய்தார்கள் என்ற நடந்த உண்மையையும் இதில் நடந்தது என்ன என்பதையும் அறிந்து கொள்ள சமூகத்திற்கு நீண்ட காலம் தேவைப்படவில்லை.


எவ்வாறாயினும் இவர்களை முஸ்லிம் சமூகத்தின் மொத்த அரசியலில் இருந்து ஒதுக்குவதே முஸ்லிம் சமூகத்தின் வேண்டுதலாகும்.


இதற்கமைய தலைமைகள் ஒழுக்காற்று நடவடிக்கை கட்சிகளில் இருந்து பதவி நீங்கம் என்ற நாடகங்களை அரங்கேற்றிய போதிலும், அனைத்தும் சமூகத்தை மீண்டும் மீண்டும் விதம் விதமாக ஏமாற்றுவதாகவே இருந்தது. இந்த விடயம் தொடர்பில் முக்கிய போராளி ஒருவரை சந்தித்த போது விடயத்தை விபரமாகவும் வினையமாகவும் கூறினார்.


$ads={1}


அதாவது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. இதைபற்றி தூர நோக்குடன் சிந்திக்க வேண்டுமாம். அவ்வாறு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அடுத்து வரும் தேர்தல் காலங்களில், அவர்கள் கட்சியை விட்டு, அல்லது சுயேற்சையாக போட்டியிட்டால் கட்சி இன்னும் சின்னா பின்னமாகும். அடுத்து கட்சியை தாங்கி நிற்பது கிழக்கு மாகாணமே என்பதால் இதில் பிரதேசவாதம் ஏற்பட்டு கட்சிக்குள் பயங்கரமான வெடிப்புகள் ஏற்படலாம். அதனால் நடவடிக்கை எடுப்பது சற்று கடினமான விடயம் எனவும், அது சாத்தியமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.


அவ்வாறாயின் தொடர்ந்தும் இவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்பட்டாலும் இவர்களின் நிலைப்பாடு, சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தானா?


முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்டாலும், இவர்களினால் முஸ்லிம் உரிமைகள்  இவர்களால் விலை போனாலும் கட்சியை பாதுகாத்துக் கொண்டால் போதுமானது என்பதுதான் இவர்களின் நிலைப்பாடா?


தொடர்ந்தும் இவ்வாறான அரசியல் வாதிகளின் கட்சிகளின் பின்னால் பயணிப்பது முஸ்லிம் சமூகத்தை இதை விட பெரிய பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்ந கால வரலாறுகளை உற்று நோக்கும் போது எமது உரிமைகள் பறிக்கப்பட்டதை விட இவர்களால் விலை போன உரிமைகளே அதிகம். 


முஸ்லிம் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தனித்துவமான கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், அது இன்று ஒரு சிலரின் வாழ்கையின் தனித்துவத்தையே பாதுகாக்கின்றன.ஒரு சிலரை வாழவைக்கவே இன்று முழு முஸ்லிம் சமூகமும் தண்டனை அனுபவிக்கின்றது. இதுவே இன்றை முஸ்லிம் அரசியலினதும் ஆன்மீகத்தினதும் யதார்த்தம். 


எனவே இதைவிட ஏதாவது ஒரு பெரும்பான்மை கட்சியுடன் முஸ்லிம்கள் பயணித்திருந்தால் அது இனவாத கட்சியாயினும் சரியே, இன்று இந்த இன விதிகளிடமிருந்து நமது உரிமைகளாவது பாதுகாக்கப்பட்டிருக்கும். இன்றும் உரிமைகள் பறிக்கப்படும் போது அதற்காக குரல் கொடுக்காமல் இருப்பது கவலைக்குரியதே.


இதை விடுத்து போராட்டத்தின் மத்தியிலும், சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஜனாஸாக்களை அடக்கும் போது மரணித்த ஜனாஸா விடயத்தில் அரசியல் இலாபம் அடைய முற்படுவது எந்த போராட்டத்திலும் எந்தக் காரியங்களிலும் பங்கு கொள்ளாமல் சானக்கியம் பேசுவது இவர்களின் கேவலமான கோலைத்தனமான அரசியலின் அடையாளமாகும்.


$ads={1}


எனவே அடியில் இருந்து பாதுகாக்க காப்பவனுக்கு துப்பில்லை என்றால் அடிப்பவனின் காலில் விழுவதை தவிர வேறு வழியில்லை. இதுவே இன்றைய முஸ்லிம் சமூகத்தின் கவலைக்கிடமான நிலை.


எனவே இந்த முஸ்லிம் உரிமை வியாபாரிகளிடம் தொடர்ந்தும்  ஏமாறாமல் முஸ்லிம் சமூகம் சிந்திக்குமா?


இவர்களை தொடர்ந்தும் நம்புவது மண் குதிரையின் கதையா?


இனியாவது சிந்திப்போம்...


-பேருவலை ஹில்மி


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.