கொரோனா தொற்றினால் அலவத்துகொடை பகுதியை சேர்ந்த 23 வயது நபர் பலி!

கொரோனா தொற்றினால் அலவத்துகொடை பகுதியை சேர்ந்த 23 வயது நபர் பலி!


இலங்கையில் மேலும் 04 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான தகவல்களை அரசாங்கம் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.


கொழும்பு 14ஐ சேர்ந்த 74 வயது ஆணொருவர், கொழும்பு 09ஐ சேர்ந்த 57 வயது ஆணொருவர், அலவத்துகொட பகுதியை சேர்ந்த 23 வயது ஆணொருவர், நுகேகொடை பகுதியை சேர்ந்த 77 வயது பெண்ணொருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.


$ads={1}


இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது.


இவ்வாறு உயிரிழந்தவர்களில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் கொரோனா நியூமோனியா மற்றும் குருதி நச்சூட்டதிற்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 08ஆம் திகதி உயிரிழந்தார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post