அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அரசு மேற்கொள்ளவுள்ள திட்டம்! -சரத் பொன்சேகா

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அரசு மேற்கொள்ளவுள்ள திட்டம்! -சரத் பொன்சேகா


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இந்த அரசாங்கம் சிங்கள பௌத்த வாக்குகளினால் வெற்றியீட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் இன்றைய தினம் (10) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது சிறுபான்மை மக்களின் வாக்குகளை வென்றெடுக்கக்கூடிய வேட்பாளர் ஒருவரைத் தேர்தலில் களமிறக்க தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அவர் மேலும் கூறுகையில்,


இந்த அரசாங்கம் சிங்கள பௌத்தர்களை ஏமாற்றியுள்ளது. சிங்கள பௌத்தர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கத்தோலிக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.


உண்மையில் அரசாங்கம் சிங்கள பௌத்தர்களைக் கைவிட்டுள்ளது. சிறுபான்மையினரின் வாக்குகள் தேவை என்பதனால் சஹரானின் தாக்குதல் தொடர்பில் ஆழமாக விசாரணை செய்யப்படவில்லை. முஸ்லிம் மக்கள் கோபித்துக் கொள்வார்கள் என அரசாங்கம் அஞ்சுகின்றது.


$ads={1}


நான் ஒரு நல்ல சிங்கள பௌத்தன் என்ற வகையில் எங்களது ஆட்சிக்காலத்தில் கத்தோலிக்க மக்களுக்கு நியாயம் வழங்கப்படும் என உறுதியளிக்கின்றேன்.


கடந்த காலங்களிலும் இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்துள்ளோம்; எதிர்வரும் காலத்திலும் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வோம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post