நவீன இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து அரசு கவனம் செலுத்தும்! -மதுர விதானகே

நவீன இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து அரசு கவனம் செலுத்தும்! -மதுர விதானகே

மதுர விதானகே

இஸ்லாமிய நவீன தீவிரவாதம் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும். நவீன தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களே ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை முன்னெடுத்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.


பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், 


ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை கொண்டு எதிர்தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். கடந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பை அரசியல் நோக்கங்களுக்காக பலவீனப்படுத்தியதன் விளைவாகவே குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றது.


இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைத்தூக்கியுள்ளது. இவ்விடயம் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றில் உரையாற்றிபோது முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி, இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதொன்று கிடையாது என்று குறிப்பிட்டார்கள். அரசாங்கத்தின் இருப்பை தக்க வைத்துக்கொள்ள இரண்டு அரச தலைவர்களும் இவரது கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.


நாட்டில் பாரம்பரிய இஸ்லாமிய அடிப்படைவாதம், நவீன இஸ்லாமிய அடிப்படைவாதம் என இரு பிரிவுகள் காணப்படுகின்றன.ந வீன இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தொடர்புடையவர்கள். உலகளாவிய ரீதியில் பிரசித்திபெற்ற கற்கை நெறிகளை பின்பற்றியுள்ளார்கள் .ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலையும் நவீன இஸ்லாமிய அடிப்படைவாதிகளே நடத்தினார்கள். ஆகவே நவீன அடிப்படைவாதம் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும்.


$ads={1}


ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான அறிக்கையை கொண்டு அரசாங்கத்தை எவராலும் பலவீனப்படுத்த முடியாது. விசாரணை நடவடிக்கைகள்தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை தேர்தல் பிரசாரமாக்கி பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றவில்லை என்றார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.