விமலுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் சிஐயிடம் முறைப்பாடு!

விமலுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் சிஐயிடம் முறைப்பாடு!


அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிஐடியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


அமைச்சர் விமலின் உரை தொடர்பிலேயே ரிஷாட் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


ஸஹ்ரான் ஹாசிமுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தும் அவரது சகோதரரும் தொடர்பை பேணிவந்தனர் என விமல் வீரவன்ச தெரிவித்தமை தொடர்பிலேயே ரிஷாட் பதியுதீன் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


சிஐடியினரிடம் முறைப்பாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நான் ஸஹ்ரான் ஹாசிமை சந்தித்தது இல்லை எனது சகோதரர் அவருடன் தொடர்பை பேணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


$ads={1}


முன்னரும் நான் இதனை தெரிவித்தேன்; தற்போதும் தெரிவிக்கின்றேன்; இதுவே உண்மை என அவர் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள விடயம் பொய்யானது; அவர் தனது அரசியல் ஆதாயத்திற்காக இதனை தெரிவிக்கின்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post