இலங்கையின் பிரதேச செயலக வரலாற்றில் புதிய வரலாற்று சாதனை!

இலங்கையின் பிரதேச செயலக வரலாற்றில் புதிய வரலாற்று சாதனை!


அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இவ் வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பிரதேச செயலாளராகவும், உதவி பிரதேச செயலாளராகவும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பது வரலாற்று  சம்பவமாகும்.


அதிலும் இளைய சகோதரரான M.A.C.A ஷாபிர் அவர்கள் பிரதேச செயலாளராகவும், மூத்த சகோதரரான M.A.C அஹமட் நஸீல் உதவி பிரதேச செயலாளராகவும் ஒரே பிரதேச செயலகத்தில் கடமையாற்றுவது மற்றுமொரு வரலாற்று சாதனையாகும்.


$ads={1}

இவ்விரு சகோதரர்களும் அட்டாளைச்சேனை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்விரு சகோதரர்களை வாழ்த்துவதோடு இவர்களது பெற்றோர்களையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


இன்று பிரதேச செயலாளர் M.A.C.A ஷாபிர் அவர்களை வரவேற்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது, உதவி  பிரதேச செயலாளரான சகோதரர் M.A.C அஹமட் நஸீல், முன்னாள் பிரதேச செயலாளர் J. லியாகத் அலி ஆகியோருடன் அவர்களது தந்தையும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


முன்னாள் பிரதேச செயலாளருக்கு, பிரதேச செயலகத்தினால் பொன்னாடை அணிவித்து, வாழ்த்துப்பாவும் வழங்கி கௌரவித்தனர்.


மீண்டும் வரலாற்று சாதனையாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


-ஏறாவூர் நஸீர்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post