வடக்கில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்!

வடக்கில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்!

வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவத்தினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமந்தை சேமமடு வனப் பகுதியிலிருந்து சென்ற வாகனமொன்றை இராணுவத்தினர் நிறுத்தியுள்ளனர்.

எனினும், குறித்த வாகனம் இராணுவத்தின் சமிக்ஞையை மீறி சென்றதை அடுத்து, இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவத்தில் 39 மற்றும் 29 வயதான இருவரே காயமடைந்துள்ளனர்.

$ads={1}

சந்தேகநபர்கள் சேமமடு வனப் பகுதியிலிருந்து சட்டவிரோதமான மரங்களை கடத்த முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் மரம் ஆகியவற்றை இராணுவத்தினர், ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.