பசியின் கொடுமையால் உயிரிழந்த நடிகர் தீப்பெட்டி கணேசன்!

பசியின் கொடுமையால் உயிரிழந்த நடிகர் தீப்பெட்டி கணேசன்!

தமிழ் திரைப்படத்துறையில் குணசித்திர நடிகராக அறியப்படும் தீப்பெட்டி கணேசன் காலமானார். உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

தமிழ் படங்களான ரேனிகுண்டா, நீர்ப்பறவை, தென் மேற்கு பருவக்காற்று, பில்லா - 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன்; கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில், மூத்த மருத்துவர்கள் வரும் முன்பே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தமிழ் படங்கள் சிலவற்றில் நடித்திருந்தபோதும், தீப்பெட்டி கணேசனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வறுமை நிலையில் இருந்த அவரது வாழ்க்கை, கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில் மேலும் மோசம் அடைந்தது.

இதனால் தனக்குத் தெரிந்த புரோட்டா மாஸ்டர் தொழிலில் ஈடுபட்டு வந்தார் கணேசன். சிறு, சிறு தொழில்களில் கவனம் செலுத்தி வந்தார். அவரது நிலையை அறிந்து, திரைப்பட பாடலாசிரியர் சினேகன், நடிகர் விஷால், ஸ்ரீமன், பூச்சி முருகன் உள்ளிட்டோர் உதவி செய்தனர்.

நடிகர் விஷால் சார்பில் அவரது குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை சாமான் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

தீப்பெட்டி கணேசனின் நிஜ பெயர் கார்த்திக். அந்த பெயரைச் சொல்லி தன்னை அழைத்தவர் நடிகர் அஜித் மட்டுமே என ஷூட்டிங்கில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் தீப்பெட்டி கணேசன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

தன் மீது பாசமாக உள்ள அஜித்தை நேரில் பார்த்து அவரிடம் உதவி கேட்க பலமுறை முயன்றும் அது நடக்கவில்லை என வேறொரு பேட்டியில் தீப்பெட்டி கணேசன் கூறியிருந்தார்.

இதற்கிடையே, சமீபத்தில் தீப்பெட்டி கணேசனை தொடர்பு கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது குழந்தைகளின் ஒரு வருட படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார். 

இந்நிலையில், தீப்பெட்டி கணேசனின் இறப்புச் செய்தி, அவரது குடும்பத்தினரையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மறைந்த தீப்பெட்டி கணேசனுக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.