27 லட்சம் ரூபாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பை சேர்ந்தவர்! -பிரதி பொலிஸ் மா அதிபர்

27 லட்சம் ரூபாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பை சேர்ந்தவர்! -பிரதி பொலிஸ் மா அதிபர்


அடிப்படைவாத கருத்துகளை பிரசாரம்‌ செய்தமை மற்றும்‌ அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு உதவி ஓத்தாசைகளை வழங்கியமை தொடர்பில்‌ மற்றுமொரு சந்தேக நபரை பயங்கரவாத தடுப்புப்‌பிரிவினர்‌ கைது செய்துள்ளதாக பொலிஸ்‌ ஊடகப்‌பேச்சாளர்‌ பிரதிப் பொலிஸ் மா அதிபர்‌ அஜித் ரோஹண தெரிவித்தார்‌.


ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன்‌ இவரிடமிருந்து 27. இலட்சம்‌ ரூபா பணம்‌ மற்றும்‌ மூன்று மடிக்கணினிகள்‌ கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்‌ அவர்‌ குறிப்பிட்டார்‌.


இது தொடர்பில்‌ அவர்‌ மேலும்‌ கூறியதாவது, 


ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல்‌ சம்பவம்‌ தொடர்பில்‌ பொலிஸார், குற்றப்‌ புலனாய்வு பிரிவினர்‌ மற்றும்‌ பயங்கரவாத தடுப்பு பிரிவினர்‌ விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய இந்த தாக்குதல்‌ சம்பவத்துடன்‌ நேரடி மற்றும்‌ மறைமுக தொடர்பை கொண்டவர்கள்‌ அனைவரும்‌ கைது செய்யப்பட்டு வருகின்றனர்‌.


இந்றிலையில்‌ , ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்குள்‌ அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சித்த நபர்கள்‌ தொடர்பில்‌ பல்வேறு தகவல்கள்‌ கிடைக்கப்‌ பெற்றுள்ளன. இந்த வகையில்‌ பலர்‌ அந்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்‌.


இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில்‌ ஒருவர்‌ கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்ததுடன்‌ அவர்‌ பயங்கரவாதத்‌ தடுப்பு பிரிவினரினால்‌ தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்‌.


இதேவேளை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர்‌ வெலிகம பகுதியில்‌ வைத்து மேலும்‌ ஒரு சந்தேக நபரை‌ கைது செய்துள்ளனர்‌. மாவனெல்லை பகுதியைச்‌ சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்‌.


சந்தேக நபர்‌ ஐக்கிய அரபு இராச்சியத்தில்‌ வசித்து வந்துள்ள நிலையில்‌, அவர்‌ கடந்த 12 ஆம்‌ திகதி வெள்ளிக்‌கழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும்‌ விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.


சந்தேக நபர்‌ அடிப்படைவாத கருத்துகளை பிரசாரம்‌ செய்துள்ளதாகவும்‌ அடிப்படைவாத செயற்பாடுகளில்‌ ஈடுபடும்‌ நபர்களுக்காக நிதி சேகரிப்பில்‌ ஈடுபட்டமை மற்றும்‌ அவர்களுக்கு பண உதவிகளை செய்துள்ளதாகவும்‌ கூறப்படுகிறது. 


இதேவேளை இவர்‌ ஜமா-அத்தே இஸ்லாமி அமைப்பின்‌ கொள்கைகளை பின்பற்றி செயற்பட்டு வருபவர்‌ என்றும்‌ தெரியவந்துள்ளது.


இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 27 இலட்சம்‌ ரூபா பணம்‌ மற்றும்‌ 3 மடிக்கணனிகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர்‌ கைப்பற்றியுள்ளனர்‌. சந்தேக நபரை பயங்கரவாத தடைச்‌ சட்டத்தின்‌ கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவும்‌ பயங்கரவாத தடுப்பு பிரிவினர்‌ நடவடிக்கை எடுத்து வருஇன்றனர்‌ என்றார்‌.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.