மூன்றே மாதத்தில் 130 கோடி கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்!

மூன்றே மாதத்தில் 130 கோடி கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்!


தவறான தகவலை பரப்புவதை தடுக்கும் நோக்கில் கோடிக்கணக்கான போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களின் உண்மைத் தன்மையை சரி பார்க்கும் 80 நெட்வொர்க்குகள் மூலம் போலி கணக்குகளை இனம் காண்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஃபேஸ்புக் பதிவுகளில் உள்ள தகவல்கள் சரியானவையல்ல என்று நெட்வொர்க்குகள் கருதினால் 'தவறானது' என்ற தகவல் அப்பதிவிலேயே சேர்க்கப்படும். அதன் மூலம் ஃபேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்துவோர் அப்பதிவு உண்மை தன்மையற்றது என்று புரிந்துகொள்வர். அப்படிப்பட்ட பட்சத்தில் 95 சதவீத பயனர்கள் அவற்றை கிளிக் செய்யவே மாட்டர் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தாங்கள் நிர்ணயித்துள்ள சமுதாய தர நிர்ணய விதிமுறைகளை மீறும் பயனர்கள் மற்றும் குழுக்கள் பதிவிட முடியாமல் தடுப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 


மேலும் 2020 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் சுமார் 130 கோடி (1.3 பில்லியன்) போலி கணக்குகள் தடை செய்துள்ளதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.