உருமாற்றமடைந்த தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் இலங்கையில்!!!!!

உருமாற்றமடைந்த தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் இலங்கையில்!!!!!

தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் மாறுபட்ட கொரோனா வைரஸான பி. 1.351 கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபரொருவர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

தொற்றுக்கு இலக்கான நபர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்தே இனங்காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

மஹியங்கனை பிரதேசத்தில் இருந்தே இவ்வாறு உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பிரித்தானியாவுல் பரவி வரும் பி.1.1.7 எனும் உருமாற்றமடைந்த கொரோனா தொற்றுக்கு இலக்கான நால்வர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருப்பதாகவும் டாக்டர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பாவில் பரவி வரும் பி.1 கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஐவரும், பங்களாதேஷ் மற்றும் ஐரோப்பாவில் பரவும் பி .1.1.103 எனும் கொரோனா தொற்றுக்கு இலக்கான ஒருவரும் இவ்வாறு தனிமைப்படுத்தல் மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post