கடல் மார்க்கமாக கனடா செல்ல முட்பட்ட நபர்கள் கைது!

கடல் மார்க்கமாக கனடா செல்ல முட்பட்ட நபர்கள் கைது!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு (கனடா) செல்லத் தயாரான 24 பேரை கற்பிட்டி கடற்படையினர் நேற்று (11) கைது செய்தனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கற்பிட்டி பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கற்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் கற்பிட்டி களப்புக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை சோதனை செய்த கடற்படையினர், குறித்த லொறிக்குள் இருந்த சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த லொறி சாரதியுடன் குழந்தைகள் உட்பட 24 பேர் இலங்கையிலிருந்து வேறொரு நாட்டிற்குச் செல்ல தயாராக இருந்ததுடன், கற்பிட்டி களப்பு பகுதியில் இருந்து ஒரு படகு வரும் வரை அவர்கள் காத்திருந்ததாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவர்களிடம் ரூ. 300,000-500,000 பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் 20 ஆண்கள், ஒரு பெண் (01), இரண்டு பெண் குழந்தைகள் (02) மற்றும் ஒரு சிறுவன் (01) அடங்குவர் என்றும் இவர்களில் 09 பேர் மட்டக்களப்பு பகுதியிலும், 6 பேர் யாழ்ப்பாணம் பகுதியிலும், 05 பேர் முல்லைத்தீவு பகுதியிலும், 03 பேர் திருகோணமலை பகுதியிலும், லொறியின் சாரதி புத்தளம் பகுதியிலும் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்கள் மறைந்திருந்த லொறியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.